உடல் வலியை போக்கும் அரைக்கீரை
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தசோகையை போக்கவல்லதும், உடல் வலியை சரிசெய்ய கூடியதும், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான அரைக்கீரையின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது அரைக்கீரை. இரும்புச்சத்து நிறைந்த இது, ஹீமோகுளோபினை அதிகரிக்க வல்லது. ரத்தசோகையை போக்கும் உணவாக விளங்குகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது. காலையில் …